E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0233/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 233/ '18

      கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொலன்னாவ கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு மகளிர் தேசிய பாடசாலை, கொலன்னாவ மகளிர் கல்லூரியாகும் என்பதையும்;

      (ii) தற்போது மேற்படி கல்லூரியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதையும்;

      (iii) 18 ஆசிரியர் வெற்றிடங்களும், கல்விசாரா பணியாட்டொகுதிக்கான 08 வெற்றிடங்களும் காணப்படுகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வெற்றிடங்கள் காணப்படுவதானது பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்கும், நற்பெயருக்கும் தடையாகவும், பாதிப்பாகவும் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்குள்ள திட்டம் யாது என்பதையும்;

      (iii) அதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாது என்பதையும்;

      (iv) 2017 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் தனித்தனியே யாது என்பதையும்;

      (v) மேற்படி நிதி ஏற்பாடுகள் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் யாது என்பதையும்;

      (vi) 2018 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக நிதி ஏற்பாடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vii) ஆமெனில், அந் நிதி ஏற்பாடுகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks