பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0570/ ’10
கெளரவ கரு ஜயசூரிய,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ரத்தொழுகம வீடமைப்புத் தொகுதியில் எஞ்சியுள்ள காணித்துண்டுகளை விற்பனை செய்ய வீடமைப்பு அதிகாரசபையினால் அமுலாக்கப்பட்ட திட்டமொன்று அங்குள்ள வீடு பெறுநர்களால் மேன்மைதங்கிய சனாதிபதி அவர்களிடம் செய்த முறைப்பாட்டிற்கிணங்க இடைநிறுத்தப்பட்டதென்பதையும்,
(ii) இது சம்பந்தமாக சனாதிபதி புலமைப்பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பரிந்துரையை சனாதிபதி செயலாளர் வீடமைப்பு, அபிவிருத்தி அதிகார சபையின் அப்போதைய தலைவருக்கும், வீடமைப்பு, நிர்மானத்துறை அமைச்சின் செயலாளருக்கும் தொர்பு இல. SP/4/2/4/2/1 மற்றும் 2006.02.28 ஆம் திகதிய கடித மூலமாக அறிவித்துள்ளாரென்பதையும்,
(iii) அக்கடிதத்தில் (சுருக்கமாக) “எஞ்சியுள்ள சிறிய காணித்துண்டுகளை கிட்டத்தட்ட 23 வருடகாலமாக அந்த வீடுகளில் வசிப்பவா்கள் அனுபவித்து வந்துள்ளமையால் அவர்களுக்கு விற்பதன் மூலமாக கையளிக்க மேன்மைதங்கிய சனாதிபதியவர்களின் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சனாதிபதியின் புலனாய்வுத் துறையின் பரிந்துரைக்கிணங்க ரத்தொழுகம வீடமைப்புத் தொகுதியைச் சுற்றி செல்வதற்குள்ள வீதியை காணித்துண்டு 1820 இலிருந்து வேறாக்குவதும் காணித்துண்டு 1819ஐ அண்டிய வீடகளில் வசிப்போருக்கு விற்பனை செய்வதன் மூலமாக கையளிப்பதும் பொருத்தமானதென அறிவிக்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேன்மைதங்கிய சனாதிபதியவர்களின் மேற்படி பணிப்புரையை தாமதமின்றி நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-23
கேட்டவர்
கௌரவ கரு ஜயசூரிய, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks