E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0235/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 235/ '18

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொலொன்னாவ நகர சபை எல்லைக்குள் நீண்டகாலம் தொடக்கம் நாளொன்றுக்கு 02 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றதென்பதையும்;

      (ii) அத்துடன், தினமும் கூடுதலான நேரம் குழாய் நீரின் அழுத்தம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கும் நீர் அழுத்தம் குறைவடைவதற்குமான காரணம் யாதென்பதையும்;

      (ii) இதற்கென தற்சமயம் காணப்படும் மாற்றுத் தீர்வுகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி தீர்வுகளை செயற்படுத்துவதற்கு ஏதேனும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் திட்டவட்டமான திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks