E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0571/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ ருவன் ரணதுங்க, பா.உ.,, பா.உ.

    1. 0571/ ’10

      கெளரவ ருவன் றணதுங்க,—  பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

      (அ)    (i)      முப்படை மற்றும் பொலிசில் சேவையாற்றி, பலவீனத்தின் அடிப்படையில் ஓய்வளிக்கப்பட்டு, தற்போது ஓய்வூதியம் பெறும் ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      (ii) இவர்கள் தற்போது பெறும் குறைந்த பட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்பதையும்,

      (iii) கொட்டுகொடை, நதகமுவ, பிட்டவெல வீதியில் 215/பீ இலக்க விலாசத்தில் வசிக்கும் B6511 ஆம் சேவை இலக்கத்தைக் கொண்ட கடற்படையின் பொறியியல் தொழிநுட்ப சேவையில் பணியாற்றி விட்டு 1985.10.30 ஆம் திகதியன்று பலவீனத்தின் அடிப்படையில் ஓய்வளிக்கப்பட்டு தற்போது மனுவங்கொடை பிரதேச செயலகத்தில் ஓய்வூதிய இலக்கம் 3971 இன் கீழ் ரூபா. 6561.20 ஐ ஓய்வூதியமாகப் பெறும், ஈ.எம்.டீ. கீர்த்திசிங்க ஏக்கநாயக்க போன்றோர் எந்த வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்கப்படுகின்றார்கள் என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) திரு. கீர்த்திசிங்கவைப் போன்றோர் பெறும் ஓய்வூதியமானது தற்போதைய வாழ்க்கைச் செலவின்படி போதியதில்ல என்பதனால், இவர்களின் ஓய்வூதித்தை அதிகரிப்பதற்கு அல்லது வாழ்வாதார வழிமுறையொன்றை அமைத்துக் கொள்வதற்கு போதுமானளவு நிவாரணமொன்றை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

       (இ)    இன்றேல், ஏன்? 

கேட்கப்பட்ட திகதி

2010-11-23

கேட்டவர்

கௌரவ கெளரவ ருவன் ரணதுங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks