E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0261/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 261/ '18

      கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மூலமாக உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள கொடக்கவெல, வெலிகெபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல்வேறு கருத்திட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உரிமம் பெறுனர்கள் பற்றிய விபரங்கள் வெவ்வேறாக யாவை;

      (ii) மோசடியாக தயாரிக்கப்பட்ட உரிமங்களை ஈடுபடுத்தி பல்வேறு அனுமதி பெறாத மணல் அகழ்வு, கல்லுடைத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவென்பதை அறிவரா;

      (iii) இத்தகைய கருத்திட்டங்களையும் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks