E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0262/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 262/ '18

      கௌரவ ஹேஷா விதானகே,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது என்பதையும்;

      (ii) இந்நிலைமை காரணமாக இரத்தினபுரி நகரம் பெரிதும் அழிவுக்கு உள்ளாகி வருகின்றது என்பதையும்;

      (iii) இதற்காக களு கங்கையுடன் தொடர்புடைய ஒரு திட்டத்தை செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்ததுடன் பலவித காரணங்களினால் அது தற்போது கைவிடப்பட்டுள்ளது என்பதையும்;

      (iv) அது தொடர்பிலான மாற்றுத் திட்டமொன்று முன்மொழியப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) அரசாங்கத்தினால் இது தொடர்பாக மாற்றுத் தீர்வொன்று முன்மொழியப் பட்டிருப்பின், அத்தீர்வு யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks