பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1330/ '16
கௌரவ புத்திக பத்திறண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா ரான்ஸ்போமர் (LTL) கம்பனியின் உப கம்பனியான LTL புரோஜெக்ட்ஸ் கம்பனி தாபிக்கப்பட்ட திகதி யாது;
(ii) LTL கம்பனிக்கு இதன் 100% உரிமை உள்ளதா;
(iii) இதன் தற்போதைய உரிமையாளர்கள் யாவர்;
(iv) தற்போது LTL கம்பனிக்கு LTL புரொஜெக்ட்ஸ் கம்பனியின் பங்குகள் உரித்துடையதாகக் காணப்படுகின்றதா;
(v) LTL கம்பனிக்கு உரித்தான LTL புரொஜெக்ட்ஸ் கம்பனியின் பங்குகளை பராதீனப்படுத்துவதற்கு அல்லது உரிமை மாற்றம் செய்வதற்கான உரிமையை வழங்கியவர்கள் யார்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) LTL கம்பனிக்கு உரித்தான LTL புரொஜெக்ட்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட உப கம்பனியானது 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கணக்காய்வு அறிக்கை களில் உள்ளடங்கவில்லை என்பதையும், இதன் காரணமாக இக்கம்பனியின் இலாபப் பங்குகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறுவதில்லை என்பதையும் அவர் அறிவாரா;
(ii) இது தொடர்பில் விசாரணை நடத்தி, 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் இழந்த இலாபப் பங்குப் பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-05
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks