பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
385/ '18
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிராமிய பாடசாலைகளின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களின் பிள்ளைகளின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) அதற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளதென்பதையும்;
(iv) அதற்காக அக்காலப்பகுதியினுள் ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) 2015 ஆம் ஆண்டின் சனவரி முதல் இற்றைவரை அரசாங்கம் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக செலவிட்டுள்ள பணத் தொகை மற்றும் ஆட்சேர்க்கப் பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை கண்டி, நுவரெலிய, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கமைய தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-18
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks