E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0401/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 401/ '18

      கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2013, 2014 அல்லது அதனை அண்மித்த வருடங்களில் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு தொகை எரிபொருள் பம்பிகள் (மானி இடப்பட்ட) கொள்வனவு செய்யப்பட்டதா;

      (ii) ஆமெனின், அதன் எண்ணிக்கை எவ்வளவு;

      (iii) மேற்படி எரிபொருள் பம்பிகளை உற்பத்தி செய்த நாடு, உற்பத்தி வருடம் மற்றும் வகை யாது;

      (iv) மேற்படி எரிபொருள் பம்பியொன்றின் விலை எவ்வளவு;

      (v) அதற்காக செலவு செய்யப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி எரிபொருள் பம்பி வகையானது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரப் பரிசோதனையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டவையா;

      (ii) மேற்படி பம்பிகள் தற்போது பாவனையில் உள்ளனவா, பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனவா;

      (iii) பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பின், அதற்கான காரணம் யாது;

      (iv) பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பின் அந்த பம்பிகளை கொள்வனவு செய்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை யாது?

      (v) இந்த கொள்வனவு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதிசார் நட்டம் எவ்வளவு;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-18

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks