E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0473/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 473/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊவா மாகாண சபையில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் SIN/B/AG/KI/2017/02 ஆம் இலக்க மற்றும் 2017.04.20 ஆம் திகதிய புலனாய்வு அறிக்கை ஊவா மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இவ்வறிக்கையில் பாலர் பாடசாலைகளுக்கு புத்தகப் பைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நிதி அணுசரணை பெற்றுக்கொண்டமை தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ள 5 (அ) (i) தொடக்கம் (v) வரையான பந்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விடயங்களை இச்சபையில் சமர்ப்பிப்பாரா;

      (ii) இந்த வௌிப்படுத்தல்கள் தொடர்பில் (ஆ) (i) தொடக்கம் (iii) வரை மேற்கொள்ளப்பட்டுள்ள அவதானிப்புகளை சமர்ப்பிப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks