E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0476/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 476/ '18

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— நிதி மற்றும் ​வெகுசனஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின்படி மதுபானம் மற்றும் புகை பிடித்தல் காட்சிகளைக்கொண்ட தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் அல்லது விளம்பரப் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) ஆமெனில், வெகுவசன ஊடக அமைச்சினால் நிருவகிக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் 2017.02.11 ஆம் திகதி பி.ப. 7.30 க்கும் 8.00 மணிக்கும் இடையில் ஒளிபரப்பப்பட்ட "சுவேத்த கங்தீர" தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு காட்சியில் ஒரு நடிகை புகை பிடிப்பது தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது என்பதையும்;

      (ii) குறிப்பாக, ஒரு பெண் புகைப்பிடிக்கின்ற காட்சி ஒளிபரப்பப்படுவதன் காரணமாக இது புகைபிடித்தலுக்கு ஊக்குவிப்பாக அமையலாம் என்பதையும்;

      (iii) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட ஏற்பாடுகள் அரச வெகுசன ஊடக நிறுவனமொன்றினால் மீறப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) இந்த ஒளிபரப்பு தொடர்பாக முறைசார்ந்த விசாரணையொன்றை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks