பார்க்க

E   |   සි   |  

பத்தாவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் - 2024 நவம்பர் 21ஆந் திகதி, வியாழக்கிழமை


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமானது.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுவதாக அறிவித்து மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனங்களை வாசித்ததோடு சபாநாயகர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.


சபாநாயகர் தெரிவு

10 ஆவது புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு கௌரவ அசோக சபுமல் ரன்வல, பா.உ. அவர்கள் கெளரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ., கௌரவ கௌரவ விஜித ஹேரத், பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார். அதனையடுத்து, புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கெளரவ அசோக சபுமல் ரன்வல அவர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டவர்களினால் அக்கிராசனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கெளரவ சபாநாயகர் அக்கிராசனத்திற்கு வந்து அதில் அமர முன்னர் மிகச் சுருக்கமாக சபைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கெளரவ சபாநாயகர் தலைமை வகித்ததோடு, சட்டப்படி உறுதிப்பிரமாணம் செய்து மேசையிலுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டார்.

அதன் பின்னர், வருகை தந்திருந்த கெளரவ உறுப்பினர்கள் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்  செய்துகொண்டதோடு, மேசை மீதுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டனர்.

அரசாங்க தரப்பு மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு அரசியட் கட்சிகளின் தலைவர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன. கெளரவ சபாநாயகர் அதற்கு பதிலுரை ஆற்றினார்.


பிரதி சபாநாயகர் தெரிவு

10 ஆவது புதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி, பா.உ. அவர்கள் நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ., கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.


குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவு

10 ஆவது புதிய பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர, பா.உ. அவர்கள் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ., கௌரவ சமன்மலி குணசிங்க, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

புதிய பாராளுமன்றத்தின் பாராளுமன்றச் சபை முதல்வர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பதவிகளுக்கு முறையே கௌரவ பிமல் ரத்னாயக்க, பா.உ., மற்றும் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ. ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கௌரவ சஜித் பிரேமதாச அவர்களை கௌரவ சபாநாயகர் அவர்கள் அங்கீகரித்தார்.

கௌரவ சபாநாயகர் அமர்வை மு.ப. 11.30 மணி வரை இடைநிறுத்தினார்.


அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தல்

மு.ப. 11.30 மணிக்கு சபை மீண்டும் கூடியதுடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு அநுர குமார திசாநாயக்க அவர்கள் அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தார்.


அதனையடுத்து, கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் 2024 டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மு.ப. 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என்ற பிரேரணையை பிரேரித்தார்.


அதன்படி, 1225 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks