E   |   සි   |  

2025 ஜூன் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கூட்டமொன்றைக் கூட்டுவதற்கான அறிவித்தலை பாராளுமன்றச் செயலாளர் நாயகம்  வாசித்தார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : "வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : "கம்பெனிகள் (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : "இலங்கை மின்சாரம் (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
4 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
5 : வழிவகைகள் பற்றிய குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகின்றமை தொடர்பானது
6 : உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகின்றமை தொடர்பானது


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXI ஆம் பகுதியையும்;  
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVII ஆம் பகுதி

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் புகையிரத தொடர்பாடல் முறைமையை நவீனமயப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் செயலாற்றல் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை (வருடாந்த அறிக்கை).
(ii)    2024 இன் நான்காம் காலாண்டு மற்றும் 2025 இன் முதலாம் காலாண்டு தொடர்பான, நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை. 
(iii)    2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11(3) ஆம் பிரிவின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி செயல் நுணுக்கக் கூற்று.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v)    2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.05.01 முதல் 2025.05.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(viii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு நிவாரண மன்றத்தின் வருடாந்த அறிக்கை.
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(x)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(xi)    2024 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(xiii)    2024 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி -இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி - இரண்டு மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


2026 ஆம் ஆண்டிற்கான  நிதி செயல் நுணுக்கக் கூற்று

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11(3) ஆம் பிரிவின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான  நிதி செயல் நுணுக்கக் கூற்று நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவா்களினால் அறிவிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நிதி செயல் நுணுக்கக் கூற்று” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1645மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks