பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : “தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
3 : ஜூலை 22, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூன் 18 ஆம் திகதிய 2441/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(x) 2024 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2023 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xiv) 2024 ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
எளிமைப்படுத்தப்பட்ட சேர்பெறுமதி வரி ஒழிப்பு காரணமாக ஏற்றுமதியாளர்கள் மீதான தாக்கம்
கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாக 025.07.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ வருண லியனகே அவர்களுக்கு “கோதாகொட குணரதன நாஹிமி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 24ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks