பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
3 : "சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
4 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாம் தொகுதியின் IV ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.07.01 முதல் 2025.07.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி அலுவல்கள் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(v) 2022 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கு விசேட வியாபாரப் பண்ட அறவீடு விதிக்கப்பட்டுள்ளமை
மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ கே. காதர் மஸ்தான்
இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களின் வாகனங்கள் வழங்கல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத வித்தியாலயத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2025.08.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2025.02.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 163; எதிராக 0) பின்னர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்
அதனையடுத்து, 1742 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks