பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் V, VI மற்றும் VII ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் II ஆம் பகுதி
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
நெல் மற்றும் அரிசி விலை தொடர்பான பிரச்சினைகள்
(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தெல்லிப்பளை மருத்துவமனையில் நிகழும் முறைகேடுகள் தொடர்பாக 2025.08.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்
அரசாங்குக் கணக்குகள் பற்றிய குழு முன் முன்னிலையான அரச ஊழியர் மீது தனியார் நிறுவனமொன்று சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் – திருத்தங்களுடன்
(ii) குறைநிரப்புத் தொகை — செலவினத் தலைப்பு 123 —நிகழ்ச்சித்திட்டம் 02
(iii) குறைநிரப்புத் தொகை — செலவினத் தலைப்பு 171 —நிகழ்ச்சித்திட்டம் 02
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
அதனையடுத்து, 1744 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks