பார்க்க

E   |   සි   |  

2025 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : 'பளிங்கு ரேண' (Wingfield Family) மேடை நாடகம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின்  XIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IX ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 52 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 71 ஆம் பிரிவின் கீழ், செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 20 ஆம் திகதிய 2454/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத் -  இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சிவஞானம் சிறீதரன்

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலர் வலய நகர்ப்புற நீர் மற்றும் சுகாதாரக் கருத்திட்டத்தின் விபரங்கள் மற்றும் செயல்படுத்தல்

மேற்சொன்ன வினாவிற்கு வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    ‘பிரஜாசக்தி’ நிகழ்ச்சியின் விபரங்கள் தொடர்பாக 2025.08.06 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்களின் கீழ் கௌரவ நந்தன பத்மகுமார அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii)    சீனித் தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2025.09.26 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.
(iii)    இலங்கையில் மின் உற்பத்தி விபரங்கள் தொடர்பாக 2025.03.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன: -
(i)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 23ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks