07

E   |   සි   |  

2021-11-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு காணிகளை கையகப்படுத்தும் போது உரிய பெறுமதியை வழங்குவதற்கு தேவையான சட்டரீதியான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் - காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் எஸ்.ஏம். சந்திரசேன தெரிவிப்பு

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குக் காணிகளை கையகப்படுத்தும் போது உரிய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான சட்டரீதியான திருத்தங்களை விரைவில் மேற்கொள்வதாக காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

சொத்துக்களைக் கையகப்படுத்தும் போது வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுவதாக நேற்று (09) இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

கிந்தோட்டை பலகைக் கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அவர்கள் குழுவில் கோரிக்கை விடுத்தார்.

சுற்றுலாத் துறைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய காணிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் இலகுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் அலகட்டுக்கரை பகுதியில் 800 பேருக்கு காணி உரிமைப்பத்திரங்களை வழங்கும்போது ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பிலும் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

காணிகளை இழந்த மக்களுக்கு அரசாங்கக் காணிகளை வழங்கும் வேலைத்திட்டம் கொவிட் 19 காரணமாகத் தாமதாமடைந்துள்ளதாகவும், தற்பொழுது அது இயல்பு நிலைக்கு வருவதாகவும் காணி ஆணையாளர் நாயகம் இங்கு குறிப்பிட்டார்.

அரசாங்கக் காணிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் நிலைமையொன்று தற்பொழுது காணப்படுவதாகவும், அதனை நிறுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

உதவி நில அளவையாளர் பதவிக்கு இணைத்துக்கொள்ளும் பரீட்சை அடுத்த வாரம் இடம்பெறுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த பதவிக்கு 1500 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார, உதயன கிரிந்திகொட, எஸ். நோகராதலிங்கம், சிந்தக்க அமல் மாயாதுன்ன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சுதத் மஞ்சுள, அஜித் ராஜபக்ஷ, குணதிலக ராஜபக்ஷ, கே. காதர் மஸ்தான், வீரசமன வீரசிங்க, சுதர்ஷன தெனிபிடிய ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks