பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-01-30
செய்தி வகைகள் : செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் அண்மையில் (ஜன. 24) தெரிவுசெய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது தொடர்பான விசேட கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான (பேராசிரியர்) அனில் ஜயந்த தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இது இலங்கைக்கான முக்கிய நட்புறவு நாடுகளில் ஒன்றாகும் என்றார். ஜனநாயக நாடுகள் என்ற ரீதியில் இருதரப்பு உறவுகளும் பரஸ்பர நன்மைகள் மற்றும் ஜனநாயக ஆட்சியின் விழுமியங்களைப் பலப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு போன்ற பரந்துபட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக் காணப்படுகின்றமையையும் அவர் நினைவுகூர்ந்தார். அத்துடன், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிடுகையில், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகள் 76 வருட வரலாற்றைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இரு நாடுகளும் நண்பர்களாகவும், பங்காளர்களாகவும் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். கல்வி, அனர்த்த முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரப் பகிர்வு போன்ற விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பு பரஸ்பர வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாகவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கை அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார பிரதியமைச்சருமான (பேராசிரியர்) அனில் ஜயந்த உரையாற்றகையில், இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார்.
சட்டமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களை உருவாக்குவதன் அவசியத்தை இங்கு உரையாற்றிய கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
2025-06-04
“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஜூன் 04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2025-06-03
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு இன்று (ஜூன் 03) வழங்கிவைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு இன்று (03) பாராளுமன்றத்தில் கூடிய போதே சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர், பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக்கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக குழுவில் சுட்டிக்காட்டினர். அத்துடன், இன்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை குழுவின் முன்னிலையில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்கியதுடன், எஞ்சிய சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் குழுவின் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக்கடதாசிகளை இன்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2 சத்தியக்கடதாசிகளை இரு தரப்பினருக்கும் வசதியான தினமொன்றில் மற்றும் நேரத்தில் தனிப்பட்ட வகையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பரிசீலிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது. மற்றுமொரு சாட்சியமாக வழங்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்று தொடர்பான காணொலியின் இறுவெட்டை (CD) பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவதற்கு குழு தீர்மானித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டு 9 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு கூடி முன்வைக்கப்படவுள்ளது.
2025-06-03
“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மே 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2025-06-02
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks