பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-05-14
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப. 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு, பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் ஒன்றிணைந்த சேவை பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் கலைஞர்களால் முன்வைக்கப்படவுள்ளது.
2025-05-14
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத்தொகுதி, தியவன்னா ஓயா உள்ளிட்ட வளாகம் வெசாக் அலங்காரங்கள் மற்றும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டது. கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில் பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவுகள், பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் இதற்கான பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை பாராளுமன்றத்தினால் பாராளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தியவன்னா பௌத்த பக்தி கீதம் நிகழ்வு' 2025.05.16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2025-05-12
உலகில் மிகவும் பழமைவாய்ந்த மத மெய்யியல்களில் ஒன்றான பௌத்த தருமத்தை உலகுக்கு அறிமுகப்படுத்த கௌதம புத்த பெருமானின் வாழ்க்கைய நினைவுகூறும் வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும். இது சர்வதேச ரீதியில் மாத்திரமன்றி எமது நாட்டின் சமூக கலாசாரத்தின் அடிநாதமாக பௌத்த மதத்தின் தாக்கங்கள் காணப்படுவதால் முக்கிய மத மற்றும் கலாசார தினமான இன்று இலங்கையர்களாகிய எமக்கும் சிறப்பான நாளாகும். கி.மு ஆறாம் நூற்றாண்டில் அப்போதிருந்த தம்பதீப பீடபூமியில் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில் வர்க்க மற்றும் சாதி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து நல்லிணக்கம், அஹிம்சை மற்றும் சமத்துவத்திற்கான சமூக விடுதலையத் தேடிச் செல்லும் பாதையை ஆன்மீக ரீதியாக அவர் தனது போதனைகள் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார். தற்பொழுது காணப்படும் சிக்கல் நிறைந்த சமூகச் சூழலில் உள்ள பல நெருக்கடிகளுக்குப் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிவதற்கான வழிகள் புத்த பெருமானின் போதனைகளில் புதைந்துள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். இருந்த போதிலும் இன்று எமது சிக்கலான சமூக வாழ்க்கையால் உருவாகியுள்ள சூழ்நிலைகள் காரணமாக புத்த பெருமான் போதித்த நீதியான ஆன்மீகப் பாதைகள் மற்றும் அந்த இலட்சியப் பாதையை அடைவதற்கான வழிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகள் காரணமாக பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட பௌத்த மதத்தினால் வளர்க்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்குப் பல தடைகள் உருவாகியுள்ளன. எனவே இதற்குப் பொருத்தமான சமூக, அரசியல் மற்றும் சிறந்த கலாசாரச் சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என நாம் நம்புகின்றோம். எனவே, பௌத்த போதனைகளினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான, விடுதலைமிக்க மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை எமது நாட்டில் உருவாக்குவதற்கு பௌத்த போதனைகள் நமக்கு விடிவெள்ளியாக அமையும். எனவே, சமூகம் என்ற ரீதியில் கௌதம புத்த பெருமான் போதித்த ஆன்மீக விடுதலை மற்றும் சமூக விடுதலையை நாம் அடைவதற்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதுடன், இன்றையதினம் வெசாக் தினத்தைக் கொண்டாடும் இலங்கை பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதங்கள்...! வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னசபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்
2025-05-09
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ சுகாதார மற்றும வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2025 மே 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக ஆழமாக வேரூன்றியுள்ள மற்றும் நீடித்துவரும் பரஸ்பர உறவுகளை இரு தரப்புப் பிரதிநிதிகளும் இங்கு சுட்டிக்காட்டினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் நிலைபேறான கலந்துரையாடல்கள் மூலம் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மிகவும் சவாலான காலகட்டத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக கௌரவ சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் அண்மைய இந்திய விஜயத்தைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்குப் புதிய வழிகளைத் திறப்பதற்கான மைல்கல்லாக அமைந்துள்ளது என்றார். இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக இந்தியாவின் பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் பயிற்சிகள் பணியகத்தினால் திறன் அபிவிருத்தித் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கும் சபாநாயகர் இங்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா, கௌரவ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தை நினைவு கூர்ந்ததுடன், நெருங்கிய மற்றும் நம்பகமான அயல் நாடு என்ற ரீதியில் இலங்கைக்குப் பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில், இரு பாராளுமன்றங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நட்புறவு சங்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே வலுவான உறவுகளை ஆழப்படுத்த அர்த்தமுள்ள உறவுகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய நட்புறவு சங்கத்தின் செயலாளர் வைத்தியர் காவிந்த ஜயவர்த்தன, இந்தியாவின் நீடித்த நட்புக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2025-05-08
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எகிப்திலிருந்து போட்டியிடும் கௌரவ (கலாநிதி) காலித் எல். எனெனி இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களை அண்மையில் (மே 05) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கைக்கும், எகிப்துக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, பரஸ்பர இரு தரப்பு உறவுகள் இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிடும் நபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நோக்கத்தை வெளிப்படுத்திய கலாநிதி காலித் எல். எனெனி, நாடுகளிடையே கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் எகிப்துடன் காணப்படும் நீண்டகால உறவுகள் குறித்து கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் கௌரவ அடெல் இப்ராஹிம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks