07

E   |   සි   |  

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளெ மற்றும் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் சிங்கப்பூர் பிரதிநிதி பேராசிரியர் ரஸ்வானா பேகம் அகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் (பேராசிரியர்) பேகம், சிக்கப்பூர் சட்டத்தரையொருவரான விமலா சந்திரராஜன், இலங்கையில் பெண்களுக்கான தேசிய கொள்கையினை வரைபு செய்த தன்னார்வ தொழிநுட்ப நிபுணர் கலாநிதி ரமணி ஜயசுந்தர மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிங்கப்பூரில் பெண்களை வலுப்படுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியார் பேகம் குறிப்பிடுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க கடுமையான தண்டனைகள், தனிநபர் பாதுகாப்பு உத்தரவுகள், விரைவான உத்தரவுகள், குடும்ப விலக்கு உத்தரவுகள், ஆலோசனை உத்தரவுகள் உள்ளிட்ட சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்று சுட்டிக்காட்டினார். மேலும், குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கு அரச துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும் நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் பெண்களை வலுப்படுத்தல், பாலின அடிப்படையிலான வன்முறைகளை (Gender Based V) தடுத்தல், பாலின அடிப்படையிலான சம்பள இடைவெளியை இல்லாமல் செய்தல் மற்றும் சம்பளம் கிடைக்கப்பெறாத பெண் ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவளித்தல் தொடர்பில் சிங்கப்பூரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமை தொடர்பில் பேராசிரியார் பேகம் அவர்களுக்கு, கௌரவ பர்னாந்துபுள்ளெ அவர்கள் நடனறிகளைத் தெரிவித்தார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks