E   |   සි   |  

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்துக்கான பார

கொவிட் 19 தோற்று நோய் நிலைமை காரணமாக இலங்கை சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்கள் உட்பட ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பில் தேசிய வரவு செலுவுத்திட்டம் தயாரிக்கும் போது அவதானம் செலுத்தப்படவேண்டும் என இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்துளள்ளது.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் போது ஆண் – பெண் சமநிலை தொடர்பில் அவதானத்தை செலுத்தும் வகையில் முன்மொழிவுகளை வழங்குவதற்கும் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

ஒன்றியத்தின் தலைவி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பர்னாந்துபுல்லே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆண் – பெண் சமநிலையுடன் கூடிய வரவு செலவுத்திட்டம் தயாரித்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆண் – பெண் சமநிலையுடன் கூடிய வரவு செலவுத்திட்டம் தயாரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளை அறிவுறுத்தி உரிய அமைச்சுக்களின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் போது ஆண் – பெண் சமநிலை தொடர்பில் அவதானத்தை செலுத்துவதற்கு இதன்போது பெண் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அதற்கு மேலதிகமாக, அரசாங்க நிதி பற்றிய குழு போன்ற பாராளுமன்ற குழுக்களுடன் நெருங்கி செயற்பட்டு ஆண் – பெண் சமநிலையுடன் கூடிய வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அந்தந்த குழுக்களின் அவதானத்தை செலுத்துதல் மற்றும் அதனூடாக வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் போது அது தொடர்பான அவதானத்தை செலுத்துவதற்கு பெண் உறுப்பினர்கள் தீர்மானித்தனர்.

மேலும், ஆண் – பெண் சமநிலையுடன் கூடிய வரவு செலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டுவதற்கு பரந்துபட்ட ஊடக பிரச்சார நடவடிக்கை ஒன்று தேவை எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

ஒன்லைனில் zoom ஊடாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவி ரோஹிணி கவிரத்ன, அதன் உறுப்பினர்களான கலாநிதி ஹரிணி அமரசூரிய, ராஜிகா விக்ரமசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, கீதா குமாரசிங்க மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபர ஆய்வு பிரிவின் பேராசிரியர் திலினி குணவர்தன மற்றும் கலாநிதி சமன்மாலா தொரபவில ஆகியோரால் ஆண் – பெண் சமநிலையுடன் கூடிய வரவு செலவுத்திட்டம் தயாரித்தலின் பின்னணி மற்றும் அதன் தேவை தொடர்பில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks