பார்க்க

E   |   සි   |  

சபா மண்டபக் கதவு

சபாமண்டபத்தின் அழகிய பிரதான வாயில் கதவு, நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளது. செப்பினாலானதும் வெள்ளி மென் பூச்சைக் கொண்டதுமான, 12' x12’ அளவுடைய இக்கதவு வியக்கத்தக்க முப்பரிமாணத் தோற்றத்தையுடையது. புராதன கல்வெட்டுப் பாணியில் இலங்கை அரசியலமைப்பின் பாயிரம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஓரங்களில் புராதன இலங்கையின் கலைகளைச் சித்தரிக்கும் கவர்ச்சியான தாமரை வடிவங்களும் அலங்கார மலர் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கதவின் பின்புறத்தில் பிரித்தானிய அரும்பொருட் காட்சிச்சாலையில் காணப்படும் புராதன இலங்கை விதானம் ஒன்றின் மலர்வடிவம் காணப்படுகின்றது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks