பார்க்க

E   |   සි   |  

சபாமண்டபம்

360° காட்சி

செவ்வக வடிவான சபாமண்டபம், முழுக்கட்டிடத்தினதும் மையப்பகுதியில் இரண்டு மாடிகளின் உயரத்தை உள்ளடக்குகின்றது. மன்னர்களினதும் கோவில்கள் மற்றும் கோறளைகளினதும் கொடிகள், விருதுகள், பதாகைகள் என்பனவற்றில் 18 வெள்ளிக் கொடிகளாக, கறையற்ற உருக்கினாலான கம்பங்களில் அலங்காரமாகக் காட்சியளிக்கின்றன. இவையும், சபாமண்டபத்துக்கு மேல், ஓர் அகல் வட்டத்தில் காணப்படும், ஏழு அடி உயரமான இலங்கையின் தேசிய சின்னமும், சபாமண்டபத்திற்கு அதற்குரிய மேன்மையை அளிக்கின்றன. குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கூடியதாக சபாமண்டபம் 232 ஆசனங்களைக் கொண்டுள்ளதோடு இவ்வாசனங்கள் சபாநாயகரின் ஆசனத்திற்கு இருபுறமும் 116 ஆசனங்கள் வீதம் வைக்கப்பட்டுள்ளன.

சபாமண்டபத் தென்கோடியின் நடுப்பகுதியில் சபாநாயகரின் ஆசனம் வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் ஆசனத்திற்கு உடனடுத்து கீழாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கான மேசை காணப்படுகின்றது. சபாமண்டப எல்லைக்கு வெளியே சபாநாயகரது ஆசனம் தென்படக்கூடிய வகையில் படைக்கலச்சேவிதர் மற்றும் பிரதிப் படைக்கலச் சேவிதரின் ஆசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சபாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் சில விசேட நோக்கங்களுக்கான கூடங்கள் உள்ளன. ஹன்சாட் அலுவலர்களுக்கான கூடமும், பாராளுமன்ற நிர்வாக அலுவலர்களுக்கான கூடமும், முறையே அக்கிராசனத்துக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் உள்ளன.

சபாமண்டபத்தின் இருபுறமும் அகலமான முகப்புக் கூடங்கள் அமைந்துள்ளதோடு அதனூடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாமண்டபத்தினுள் பிரவேசிப்பர். இக்கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உரையாடக்கூடியவாறு வசதியான இருக்கைகளும் தேவையான ஏனைய சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks