பார்க்க

E   |   සි   |  

சபையின் தடை எல்லை

பிரதான நுழைவாயிலில் இருந்து, சபாமண்டபத்தை அடைவதற்கான படிகளுக்குச் சற்று மேலாக, சபாமண்டபத்தின் நடுப்பகுதியில், செங்கம்பளம் விரிக்கப்பட்ட தரைக்குக் குறுக்காக, நீண்ட செவ்வக வடிவான, நிக்கல் பட்டியொன்று இடப்பட்டுள்ளது. அது சபையின் தடை எல்லையைக் குறிக்கின்றது. அந்தப்பட்டியின் முகப்பில், வீரம், நிலைபேறு, சுபிட்சம் என்பவற்றின் பாரம்பரியமான, சிக்கலான வடிவமைப்பைக் கொண்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சபை உத்தியோகத்தர் தவிர்ந்த வேறு எந்தவொரு நபரும் இத்தடை எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. பொதுத் தேர்தல் ஒன்றின் பின்னர், தடை எல்லைக்குள் உறுப்பினர்கள் அமர்கின்ற, முதலாவது கூட்டம் தவிர்ந்த, சத்தியப் பிரமாணம் செய்யாத உறுப்பினர்களும், பாராளுமன்றத்தினால், அதன் முன் சமுகமளிக்கும்படி பணிக்கப்பட்ட எவரும், இத்தடை எல்லைக்கு வெளியேயே நிற்பர். சபாமண்டபத்தினுள் சபாநாயகர் வருகின்றபோது செங்கோலைத் தாங்கிச் செல்லும் படைக்கலச் சேவிதரும், பிரதிப்படைக்கலச் சேவிதரும் தடை எல்லைக்கப்பால் அமர்ந்திருப்பர். படைக்கலச் சேவிதர் மற்றும் அவரது பிரதி ஆகியோருக்கு வைபவ உத்தியோகபூர்வ உடையின் போது சபா மண்டபத்தினுள் உடைவாளை அணிந்திருக்கும் சிறப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks