07

E   |   සි   |  



தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வேறு பத்து உறுப்பினர்களையும் கொண்டுள்ள சட்டவாக்க நிலையியற் குழு எனப் பெயர்குறிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல் வேண்டும்., ,தெரிவுக் குழுவானது அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் இக்குழுவில் சேவையாற்றுவதற்கான மேலதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கலாம்; சபாநாயகர் அத்தகைய மேலதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குத் தத்துவங் கொண்டவராவார்., குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்., சட்டவாக்க நிலையியற் குழுவொன்றின் கடமையானது, பாராளுமன்றத்தினால் அதற்கு ஆற்றுப்படுத்தப்படும் உத்தேச நியதிச்சட்டங்களையும் சட்டமூலங்களையும் பரிசீலனை செய்தலுடன் வரையறுக்கப்படும்., தமது கடமைகளைச் செயற்படுத்துவதற்காக ஆட்களையும், பத்திரங்களையும், பதிவேடுகளையும் வரவழைப்பதற்கு குழு அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்., சட்டவாக்க நிலையியற் குழுவொன்றின் தவிசாளருக்கு மூலவாக்கு ஒன்றிருத்தல் வேண்டுமென்பதுடன் வாக்கெடுப்பின்போது வாக்குகள் சமமாகவிருக்கும் சந்தர்ப்பத்தில், அறுதியிடும் வாக்கொன்றும் அவருக்கு இருத்தல் வேண்டும்., சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் சட்டமூலம் ஒன்றிற்குப் பொறுப்பான ஓர் உறுப்பினர், அக்குழுவின் ஓர் உறுப்பினராக இல்லாத சந்தர்ப்பத்தில், அத்தகைய சட்டமூலம் பரிசீலிக்கப்படும் கூட்டம் எதற்கும் சமுகமளிக்கவும், அச்சட்டமூலத்தைப் பற்றி உரை நிகழ்த்தவும், அத்தகைய சட்டமூலம் தொடர்பாக எழும் எப்பிரச்சினை குறித்தும் திருத்தங்களைப் பிரேரித்து அக்குழுவின் ஓர் உறுப்பினர்போன்று வாக்களிக்கவும் உரிமையுடையவராவார்., சட்டவாக்க நிலையியற் குழுவின் நடைமுறை, ஏறத்தாழ முழுப் பாராளுமன்றக் குழுவின் நடைமுறையை ஒத்ததாக இருத்தல் வேண்டுமென்பதுடன் நிலையியற் குழுவொன்றின் கூட்ட அறிக்கைகள் முழுப் பாராளுமன்றக் குழுவொன்றின் கூட்ட அறிக்கைகள் பதியப்படுதல் போன்றே பதியப்படுதலும் வேண்டும். அத்துடன் குழுவானது பாராளுமன்றத்தால் ஏதேனும் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அக்காலவெல்லைக்குள் சட்டமூலத்தை அல்லது உத்தேச நியதிச்சட்டத்தை உள்ளடக்கிய குழுவின் அறிக்கையினைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும் ,ஆயினும், ஒரு அமர்வுத்தொடரின் இறுதியில் சட்டவாக்க நிலையியற் குழுவொன்று அதன் கலந்தாராய்வினை முடித்து அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்காத சந்தர்ப்பத்தில் அக்குழுவின் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வுத்தொடரில் அச்சட்டமூலம் உத்தேச நியதிச்சட்டம் ஆற்றுப்படுத்தப்படும் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்.


குழு பட்டியல்

சட்டவாக்க நிலையியற் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 2 கூட்டத்தொடர்  | சட்டவாக்க நிலையியற் குழு

சட்டவாக்க நிலையியற் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 கூட்டத்தொடர்  | சட்டவாக்க நிலையியற் குழு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks