E   |   සි   |  



2022 செப்டம்பர் 09 ஆம் திகதி தேசிய பேரவையை தாபிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு அமைவாக,

(அ)      "தேசிய பேரவை" என பெயர் குறிக்கப்படும் ஒரு பாராளுமன்றக் குழு இருத்தல் வேண்டும்.

(ஆ)      அது கௌரவ சபாநாயகரை தவிசாளராகவும் பிரதம அமைச்சர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் ஆகியவர்களுடன் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பத்தைந்துக்கு (35) மேற்படாத பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

அதற்கிணங்க, இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பின்வரும் 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பேரவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

 

- குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கு வழிகாட்டும் பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை தீர்மானிப்பதற்கும்; அத்துடன்

- பொருளாதார உறுதிப்படுத்தல் தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய உடன்பாட்டிற்கு வருவதற்கும்; அத்துடன்

- அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியவர்களுடனான விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும்;

 நியாயாதிக்கத்தையும் பொதுவான பொறுப்புகளையும் கொண்டிருக்கும்.

(ஈ) தேசிய பேரவையானது,

- துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

- அரசாங்க நிதி பற்றிய குழு

- அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

- அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு

- வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு

- வழிவகைகள் பற்றிய குழு

- பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு மற்றும்

- அரசாங்க நிதிகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளை  ​கோருவதற்கான தத்துவங்களைக் கொண்டிருக்கும்.

(உ)      அமைச்சரவை, அரசியலமைப்பின் உறுப்புரை 43 இன் கீழ் அதன் கடமைகளை நிறைவேற்றும் போது பேரவைக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ஊ) ​    தேசிய பேரவையின் கூட்ட நடப்பெண் பத்து (10) உறுப்பினர்களாகும்.

(எ)       குழுவின் முன் கூட்டிய அனுமதியைப்  பெறாது அடுத்தடுத்த மூன்று கூட்டங்களுக்கு வருகைதராதிருக்கும் எவரேனும் உறுப்பினர் குழுவின் உறுப்பாண்மையை வறிதாக்கியவராகக் கருதப்படுதல் வேண்டும்.

"தேசிய பேரவை, எவரேனும் ஆளை அதன் முன் அழைத்து விசாரிப்பதற்கும், ஏதேனும் பத்திரம், புத்தகம், பதிவு அல்லது ஏனைய ஆவணங்களைக் கோருவதற்கும் பரிசோதிப்பதற்கும் தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளிலுள்ள குழுக்களுக்கான பொதுவான விதிகள் தேசிய பேரவைக்கும் ஏற்புடையதாதலும் வேண்டும்" என 2022 ஒக்டோபர் 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய பேரவையின் அமைப்பு விதிக்கான திருத்தம் கூறுகின்றது.

2022.09.29 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தின் போது,

1)         பொருளாதார உறுதிப்படுத்தல் தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணுதல்

2)         குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுக்கும்போது முன்னுரிமைகளை  அடையாளங்காண்பதற்காக இரண்டு உபகுழுக்கள்  நியமிக்கப்பட்டன.

2022.10.07 ஆம் திகதி  இடம்பெற்ற பொருளாதார உறுதிப்படுத்தல் தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணுதல் பற்றிய உப குழுவுின் முதலாவது  கூட்டத்தில் கௌரவ  சம்பக்க ரணவக்க  அவர்கள் அந்த உபகுழுவின்  தவிசாளராகவும்   அன்றைய தினம் (2022.10.07)  இடம்பெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுக்கும்போது முன்னுரிமைகளை  அடையாளங்காண்பதற்கான உப குழுவின் கூட்டத்தில் கௌரவ நாமல் ராஜபக்ஷ் அவர்கள் அக்குழுவின் தவிசாளராகவும்  நியமிக்கப்பட்டனர்.


குழு பட்டியல்

தேசிய பேரவை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | தேசிய பேரவை





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks