பார்க்க

E   |   සි   |  



 தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான விடயங்களையும் பணிகளையும் கொண்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேற்படலாகாது.

 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் ஒரு பாராளுமன்றம் தொடர்ந்திருக்கும் போது செயலாற்றுதல் வேண்டுமென்பதுடன், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ அதன் விசாரணைகளைத் தொடர்ந்து நடாத்துதலும் வேண்டும்.

  துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அரசியலமைப்பின் 152 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்ட சட்டமூலங்கள் தவிர குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும் ஏதேனும் சட்டமூலம், பொருத்தனை, குழுவின் விடயப்பரப்பெல்லையினுள் வரும் வருடாந்த அறிக்கை மற்றும் செயலாற்று அறிக்கை உட்பட மற்றும்/அல்லது ஏதேனும் குழு மற்றும்/ அல்லது அமைச்சரொருவர், எவ்விடயம் அல்லது தமது நியாயாதிக்கத்திற்குள்ளான விடயங்களும் பணிகளும் தொடர்பான வேறேதேனும் கருமம் தொடர்பாகப் பரிசோதனை செய்வதற்குத் தத்துவமுடையனவாதல் வேண்டும்.

   துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அவற்றின் பொறுப்புக்களைப் பிரயோகிக்கின்ற சந்தர்ப்பங்களில் அவசியமானவை அல்லது பொருத்தமானவை என அவை கருதுகின்ற எவ்விடயம் தொடர்பாகவும் அத்தகைய புலனாய்வுகளையும் ஆய்வுகளையும் நடாத்தலாம்.

  ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும்  ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்களுக்கு குறையாமல் கூடுதல் வேண்டும்.

    துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பின்வரும் விடயங்களில் பாராளுமன்றத்திற்கு உதவுவதற்கென பொதுவான மேற்பார்வைப் பொறுப்புக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்:—

(அ)     தற்போதுள்ள அரசாங்க கொள்கைகளின் பிரயோகம், நிருவாகம், நிறைவேற்றுகை, மற்றும் பயனுடைமை ஆகியவை பற்றிய அதன் பகுப்பாய்வு, கணிப்பீடு மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளல்;

(ஆ)     மாற்றுக் கொள்கைகளை வகுத்தமைப்பதற்கான எதிர்கால ஆராய்ச்சி மற்றும் எதிர்வுகூறலுக்கான அதன் செயற்பாடுகள்;

(இ)     பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பிரயோகம், நிருவாகம், நிறைவேற்றுகை, மற்றும் பயனுடைமை தொடர்பாகவும் ஏதேனும் புதிய அல்லது மேலதிகச் சட்டங்களை இயற்றுவதற்கான அவசியத்தை அல்லது விருப்பினைச் சுட்டிக் காட்டக்கூடிய நிலைமைகள், சூழ்நிலைகள் ஆகியவை பற்றிய பகுப்பாய்வு, கணிப்பீடு மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளல்;

(ஈ)      ஏதேனும் சட்டம் அத்துடன் அவசியமான அல்லது பொருத்தமான மேலதிகச் சட்டவாக்கங்களை வகுத்தமைத்தல் பரிசீலித்தல் மற்றும் சட்டமாக்குதல் அல்லது ஏதேனும் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.

அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் நியாயாதிக்கத்தினுள் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட ஏதேனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அல்லது ஏதேனும் பதவியினை வகிப்பதற்குப் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரினதும் தகுதியினை பரிசோதனை செய்தலும் பொருத்தமான அமைச்சுக்கு அத்தகைய ஆட்கள் தொடர்பான விதப்புரைகளைச் செய்தலும்;

 பின்வருவோர் தவிர்ந்த எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களாகச் சேவையாற்றுவதற்குத் தகைமையுடையோராதல் வேண்டும்:—

(அ)    சபாநாயகர்;

(ஆ)   பிரதிச் சபாநாயகர்;

(இ)    குழுக்களின் பிரதித் தவிசாளர்;

(ஈ)     பிரதம அமைச்சர்;

(உ)    பாராளுமன்ற சபை முதல்வர்;

(ஊ)   பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்; அத்துடன்

(எ)     அரசியலமைப்பின் 43(1) ஆம் உறுப்புரையின்கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள்.

அரசியலமைப்பின் 45(1) ஆம் உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், அத்துடன் பிரதி அமைச்சர்கள் அத்தகைய அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் எந்த அமைச்சரவை அமைச்சரின் நோக்கெல்லையின் கீழ் பணியாற்றுகின்றாரோ அந்த அமைச்சரவையின் அமைச்சரின் ஏதேனும் விடயம், பணி, திணைக்களம் அல்லது நிறுவனம் என்பவற்றைப் போன்ற அதன் நியாயாதிக்கமும் தொடர்புபட்ட பணிகளும் உள்ளனவான ஏதேனும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றுவதற்குத் தகைமையுடையோராதலாகாது:

ஆயினும், சட்டமூலம் ஒன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பத்தில் குழுவிற்கு உதவுவதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் உறுப்பினர் அல்லாத அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரை குழுவானது அதன் கூட்டத்திற்கு அழைக்கலாம்.

 தெரிவுக் குழுவானது துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு உறுப்பினர்களைப் பெயர்குறிக்கும் போது, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அரசியற் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு உரிய கவனம் செலுத்தி, அத்தகைய அரசியற் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்களினால் செய்யப்பட்ட பெயர் நியமனத்திற்கு இணங்கச் செயற்படல் வேண்டும்.

 

 

   குறிப்பிட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினரல்லாத எவரேனும் பாராளுமன்ற உறுப்பினர் அக்கூட்டத்தில் நடைமுறைகளை அவதானிப்பதற்கு அக்குழுவின் தவிசாளரால் அனுமதிக்கப்படலாம்.

  ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும் அதன் முதலாவது கூட்டத்திலும் அதன் பின்னர் தவிசாளர் பதவி வறிதாகிய பின்னர் கூடும் முதலாவது கூட்டத்திலும், துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களிடையேயிருந்து தவிசாளரொருவரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

  ஏதேனும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் அனுமதியைப் பெறாமல் அத்தகைய குழுவின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களிற்கு வருகைதராதுள்ள குழுவின் உறுப்பினர், அத்தகைய குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்.

  ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும் அது அவசியமெனக் கருதுமிடத்து, அவசியமானவையெனக் குழு கருதக்கூடியவாறான அத்தகைய கருமங்களைப் பரிசோதனை செய்து அத்தகைய குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு அதன் சொந்த உறுப்பினர்களிலிருந்து உபகுழுக்களை நியமிக்கலாம்.

 ஒரு துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட ஏதேனும் விடயம் ஆற்றுப்படுத்துகைத் திகதியிலிருந்து ஆறு வாரங்கள் கழியும்வரை,  பாராளுமன்றம் வேறுவகையாகப் பணித்திருந்தாலொழிய, பாராளுமன்றத்தினால் கவனத்திற் கெடுக்கப்படுதலாகாது. பாராளுமன்றமானது தீர்மானமொன்றின் மூலம் அத்தகைய காலப்பகுதியை தீர்மானிக்கலாம்.

 ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும், ஏதேனும் சட்டமூலம் அல்லது வேறு ஏதேனும் பகிரங்க முக்கியத்துவம் வாய்ந்த கருமம் தொடர்பாக எவரேனும் பாதிக்கப்பட்ட அல்லது அக்கறைகொண்ட எவரேனுமாளிடமிருந்து சான்று கோரலாம்.

 ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும், ஆட்களை அழைப்பதற்கும் பத்திரங்களையும் பதிவேடுகளையும் கோருவதற்கும் தத்துவமளிக்கப்படுவதுடன் அவர்களின் முன்னர் எடுக்கப்பட்ட சான்றின் நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் சேர்த்து அவர்களின் அபிப்பிராயங்களையும் அவதானிப்புக்களையும் உள்ளடக்கிய அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலும் வேண்டும்.

 ஒரு துறைசார் மேற்பார்வைக் குழு சட்டத்தை இயற்ற அல்லது சட்டவாக்கம் சாராத  அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விடயம் குறித்துரைக்கப்பட்ட மற்றும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்ட அமைச்சரவையின் அமைச்சர் அல்லது அவ்வாறு ஒதுக்கப்படாவிட்டால், பிரதமர் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்ட பரிந்துரைகளை எட்டு வாரங்களுக்குள் நிறைவேற்றி, அந்த அவதானிப்புகள் தொடர்பாக அவர் எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பித்தல் வேண்டும் அல்லது குறிப்பிட்ட சிபாரிசுகள்  நிறைவுசெய்ய முடியாது என அமைச்சர் கருதினால், அதற்கான காரணங்களை அவர் எழுத்துமூலமாக விளக்கி அவர் முன்மொழிகின்ற மாற்று நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுதலும் வேண்டும். குழுவுக்குத் தேவைப்படின் நிலைப்பாட்டை நேரில் வந்து விளக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரை குழுவிற்கு தனிப்பட்ட ரீதியில் அழைக்க முடியும் என்பதுடன் அவ்வாறான விடயங்களால் எழும் கேள்விகளுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும்.

 (அ)  குழுவின் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு விடயத்திலும் குழுவிற்கு உதவுவதற்கு 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்திற்கு (5) மேற்படாத இளைஞர் பிரதிநிதிகளை தவிசாளர் அழைக்கலாம்.

        (ஆ)  தவிசாளரின் அனுமதியுடன், அவ்வாறு அழைக்கப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள், சாட்சிகளிடம் இருந்து கேள்விகளைக் கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதோடு மற்றும் குழுவின் முன் ஆவணங்களைப் பரிசீலிக்கலாம்: எவ்வாறாயினும், அந்த இளைஞர் பிரதிநிதிகள் குழுவில் வாக்களிக்க மாட்டார்கள்.     

        (இ)  குழு தீர்மானிக்கின்றவாறான எந்தவொரு தீர்மானத்திற்கும் உட்பட்டு, அறிக்கைக்கான அநுபந்தம் ஒன்றாக குழுவின் அறிக்கையில் இளைஞர் பிரதிநிதிகளின் கருத்துகள், அவதானிப்புகள் மற்றும் அபிப்பிராயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு தவிசாளர் அனுமதியளிக்கலாம்.

      (ஈ)   இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல்கள் தெரிவுக் குழுவினால் செய்யப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.]



 


குழு பட்டியல்

காண்க

வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

உயர்கல்வி மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு பற்றிய உப குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

சுகாதார அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 வது கூட்டத்தொடர்  | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks