பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
85 ஆம் நிலையியற் கட்டளையின் (1)(அ) பந்தியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழுவைத் தவிர, செயலாளர் நாயகம் அல்லது செயலாளர் நாயகத்தினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் வேறெவரேனும் உத்தியோகத்தர் ஒவ்வொரு குழுவிற்குமான செயலாளராதல் வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் அவசியமென அது கருதும்போது, அத்தகைய குழுவினால் குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியினுள் அத்தகைய கருமங்களைப் பரிசோதனை செய்து அத்தகைய குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு அதன் சொந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய உபகுழுக்களை நியமிக்கலாம். அத்தகைய குழுவானது அவசியமென அது கருதும்போது உபகுழுவானது அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட கருமங்களை முழுமையாகப் பரிசீலிப்பதற்குத் தேவையான கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன்முன்னர் அழைத்து விசாரணை செய்வதற்கும் ஏதேனும் பத்திரத்தை, பதிவேட்டை அல்லது ஆவணத்தை வரவழைத்துப் பரிசோதனை செய்வதற்கும் பரிசீலனைக்காக இடத்துக்கிடம் செல்வதற்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூடுவதற்கும் அத்தகைய உபகுழுக்களிற்கு அதிகாரமளிக்கலாம்.
மேற்படி இரண்டாம் பந்தியின்கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வோர் உபகுழுவும் ஒரு தவிசாளரையும் அதன் உறுப்பினர்களிடையேயிருந்து குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய உபகுழுவின் கூட்டநடப்பெண் தவிசாளருட்பட இரு உறுப்பினர்களைக் கொண்டமைதல் வேண்டும்.
ஏதேனும் குழுவிற்கான செயலாளர் குழுவின் பணியாட்டொகுதியினரிடையேயிருந்து ஒவ்வோர் உபகுழுவிற்கும் அலுவலர் ஒருவரைக் கையளிக்கலாம் என்பதுடன், அவர் அத்தகைய ஒவ்வோர் உபகுழுவினதும் கூட்ட அறிக்கைகளைத் தயாரித்துப் பேணுதலும் வேண்டும்.
ஏதேனும் குழுவின் அல்லது உபகுழுவின் அறிக்கை தவிசாளரினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், தவிசாளர் சமுகமளித்திராத சந்தர்ப்பத்தில், தவிசாளரினால் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் வேறு எவரேனும் உறுப்பினரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஓர் உபகுழுவின் தவிசாளராகப் பணியாற்றுகின்ற குழுவின் எவரேனும் உறுப்பினர் ஒரே சந்தர்ப்பத்தில் அதே குழுவின் வேறேதேனும் உபகுழுவில் தவிசாளராகப் பணியாற்றுதலாகாது.
குழுவொன்றின் ஏதேனும் அறிக்கை சபாபீடத்தில் இடப்படும்போது, பாராளுமன்றம் அத்தகைய அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக உரிய அமைச்சரவையின் அமைச்சர் எட்டு வாரக் காலப்பகுதியினுள் பதிலளித்தல் வேண்டுமெனக் கட்டளையிடலாம். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினதும் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினதும் ஏதேனும் அறிக்கை தொடர்பாக நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அரசாங்கத்தின் பதிலைச் சபாபீடத்தில் இடுதல் வேண்டும். ஏனைய குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் பதிலளித்தல் வேண்டும்.
ஒரு குழுவும் அத்தகைய குழுவினால் நியமிக்கப்பட்ட ஏதேனும் உபகுழுவும் பாராளுமன்றத்திற்கு வெளியே கூடுவதற்குச் சபாநாயகரிடம் அனுமதிபெறுதல் வேண்டும்.
குழுவொன்று அதன் கட்டளை நியதிகளிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்கோ அல்லது சிக்கலான கருமங்களைத் தெளிவுபடுத்துவதற்கோ விசேட அறிவைக் கொண்ட ஆட்களை சபாநாயகரின் அங்கீகாரத்திற்கமைய நியமிப்பதற்கும் அத்தகைய ஆட்களுக்கு ஊதியமளிப்பதற்கும் தத்துவமுடையதாதல் வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் அத்தகைய குழுவினால் நியமிக்கப்பட்ட ஏதேனும் உபகுழுவும் குழுவினால் அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்டபோது, சபாநாயகரின் அங்கீகாரத்துடன் தமது கூட்டங்களிற்குப் புறத்தோரை அனுமதிப்பதற்கான தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய புறத்தோர் அக்குழு அல்லது உபகுழு கலந்துரையாடும்போது விலக்கப்படலாம்.
அத்தகைய குழுவின் அல்லது உபகுழுவின் தவிசாளர், கூட்டத்திற்குப் புறத்தோரை அனுமதிப்பதில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைமுறையைத் தீர்மானித்தல் வேண்டும்.
பாராளுமன்ற கலரிக்கு வருகின்ற பார்வையாளர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் விதிகள், ஒரு குழுவின் அல்லது உபகுழுவின் கூட்டங்களிற்கு அனுமதிக்கப்பட்ட புறத்தோருக்கும் பிரயோகிக்கப்படல் வேண்டும்.
குழுவின் அல்லது உபகுழுவின் கூட்டங்களில் ஒழுங்கைப் பேணுவது தொடர்பில் சபாநாயகருக்குள்ள அதே தத்துவங்களை விடயத்துக்கேற்ப ஒரு குழுவின் அல்லது உபகுழுவின் தவிசாளர் கொண்டிருத்தல் வேண்டும்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 4 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் | உப குழுக்கள்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks