இது தெரிவுக் குழுவால் நியமிக்கப்பட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பொது மக்களால் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, இக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து, அம்மனுக்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அதனுடைய கருத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிப்பது தான் இக் குழுவின் கடமையாகும். இக் குழுவானது ஆட்களைத் தம்முன் வரவழைத்து விசாரிக்கவும், பத்திரம், பதிவு, புத்தகம் வேறு ஏதாவது ஆவணங்கள் என்பனவற்றைத் தருவித்து, பரிசோதிக்கவும், களஞ்சியங்களையும், சொத்துக்களையும் அணுகிச் சென்று ஆராயவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் பொது மனுக்குழுவிற்கு மனுக்களை சமர்ப்பிக்கும் நடபடிமுறை
25 (அ) - மனுக்கள்
(1) | பாராளுமன்றத்திற்குச் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் சபாநாயகருக்கு முகவரியிடப்பட்ட ஒரு மனு வடிவத்திலிருத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஒவ்வொரு மனுவும் ஓர் உறுப்பினரால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். |
(2) | ஒவ்வொரு மனுவும் மதிப்பான வார்த்தைகளில் இருத்தல் வேண்டுமென்பதுடன், பொருத்தமற்ற கூற்றுக்களைக் கொண்டிருத்தலுமாகாது. |
(3) | ஒவ்வொரு மனுவும் தெளிவாகவும் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டுமென்பதுடன், கோருவதான நிவாரணத்தை எடுத்துரைக்கும் வேண்டுதல் ஒன்றுடன் அது முடிதலும் வேண்டும். |
(4) | நோய் காரணமாக இயலாமை விடயத்தில் தவிர, ஒவ்வொரு மனுவும், மனுதாரரால் அல்லது மனுதாரர்களால் ஒப்பமிடப்படுதல் வேண்டும். எழுத இயலாத ஆள் ஒருவர், சாட்சியொருவரின் முன்னிலையில் தனது அடையாளத்தை இடுதல் வேண்டும். மனு ஒன்றின் கையொப்பக்காரர் ஒவ்வொருவரினதும் முழுப்பெயரும் முகவரியும் அதில் குறிப்பிடப்படுதல் வேண்டும். |
(5) | மனு எதனோடும் கடிதங்கள், சத்தியக்கடதாசிகள் அல்லது பிற ஆவணங்கள் எதனையும் இணைத்தல் ஆகாது. |
(6) | மனுவொன்றில் பாராளுமன்ற விவாதம் எதனையும் குறிப்பிடுதலாகாது. |
(7) | உறுப்பினர் ஒருவர் தன்னுடைய மனுவொன்றைச் சமர்ப்பிக்கத் தகுதி வாய்ந்தவராதலாகாது. ஆனால் அதனைப் பிறிதோர் உறுப்பினர் சமர்ப்பிக்கலாம். |
(8) | ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படுமுன்னர், அதன் ஆரம்பத்தில் அதற்குப் பொறுப்பாயிருக்கும் உறுப்பினரால் ஒப்பமிடப்படுதல் வேண்டுமென்பதுடன் குறைந்தபட்சம் இரு முழு நாட்களுக்குச் செயலாளர் நாயகத்திடம் அதனை இட்டுவைத்தல் வேண்டும். செயலாளர் நாயகம் அதனை அங்கீகாரத்துக்கெனச் சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டாலன்றி மனு எதுவும் சமர்ப்பிக்கப்படுதலாகாது. |
(9) | மனு ஒன்றைச் சமர்ப்பிக்கும் உறுப்பினர் ஒருவர் பின்வரும் முறையிலான கூற்றொன்றுக்கு தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். மனு ஒன்றைச் சமர்ப்பிக்கும் உறுப்பினர் ஒருவர் பின்வரும் முறையிலான கூற்றொன்றுக்கு தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். “சபாநாயகர் அவர்களே ! ................................. என்னும் இடத்தைச் சேர்ந்த (முகவரி) ................................* என்பவரிடமிருந்து / ஏனைய ......................ஆட்களிடமிருந்தும் வந்துள்ள (மனுதாரரின் பெயர்) மனு ஒன்றைச் சமர்ப்பிக்கிறேன். இக்கூற்றினமீது விவாதம் எதையும் அனுமதித்தல் ஆகாது. |
(10) | மனு ஒன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அது பொது மனுக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தியதாதல் வேண்டும். |
பெயர்
சாமா பர்னாந்து
தொலைபேசி
0094-11-2777302
தொலைநகல்
0094-11-2777558
மின்னஞ்சல்
shyama_f@parliment.lk
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர்
திகதி: 2015-07-26
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04