E   |   සි   |  

உயர் பதவிகள் பற்றிய குழு

அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டு ஏதேனும் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்ட அல்லது பதவி எதனையும் வகிப்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்ட ஆள் எவரதும் தகுதியை ஆராய்ந்து அவரைப் பற்றி விதப்புரை செய்வது உயர் பதவிகள் பற்றிய குழுவின் செயற்பாடாகும். தற்பொழுது இக் குழு, கீழ்க்காணும் பிரிவுகளுக்குட்பட்ட அதிகாரிகளின் தகுதிகளை ஆராய்கிறது.

1)  அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள்
2)  வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டவர்கள்
3)  சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்கள்

குழுவின் செயலாளருக்கு ஏதேனுமொரு நியமனம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதும் அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்ட ஒவ்வொருவரும் தங்களது சுயவிபரத் தரவுகளையும் சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய உறுதிமொழியினையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பிலான படிவத்தினை பாராளுமன்ற இணையத் தளத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்போந்த நியமனங்கள் தொடர்பில் ஏதேனும் கருத்து வெளியிட விரும்பினால் அவ்வாறு செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டி மூன்று மொழிகளிலும் செய்தித் தாள்களில் அறிவிப்பொன்றினை பிரசுரிப்பதற்கு குழுவின் செயலாளர் நடவடிக்கையெடுப்பார்.

காலத்திற்குக் காலம் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கு குழுவுக்கு அதிகாரமுள்ளது என்பதுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப் பட்டிருப்பினும் அதன் விசாரணையைத் தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

தம்மிக தசநாயக்க

தொலைபேசி

0094-11-2777228

தொலைநகல்

0094-11-2777227

மின்னஞ்சல்

dhammika_d@parliment.lk

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2015-07-26





தொடர்புடைய தகவல்கள்



பரீட்சிக்கப்பட்ட ஆட்கள்

- Ministry- நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ  | 


  • Appointment Created
  • - Ministry- நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ  | 


  • Advertise on media
  • - Institute-  | 


  • ஜகத் பாலித ஜயவர்ண Continue
  • - Institute-  | 


  • Appointment Created




  • பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

    முழுப்பதிப்புரிமையுடையது.

    வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks