பார்க்க

E   |   සි   |  

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புகள் பற்றி கலந்துரையாடுவதற்கான

வரவு செலவுத் திட்ட குழுநிலை நிகழ்ச்சி நிரலுக்காக நாளொன்றுக்கு சுமார் 8 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஒரே தினத்தில் பல்வேறு அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாட நேர்ந்துள்ளதால், அதற்கிணங்க ஒரு செலவுத் தலைப்பிற்காக சுமார் 2 மணித்தியாலங்களே ஒதுக்கப்பட்டுள்ளமையாலும், அதற்கிணங்க ஒவ்வொரு அமைச்சிலும் செலவுத் தலைப்புக்களை கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் வரையறுக்கப்பட்டுள்ளமையாலும்,

பாராளுமன்றத்தின் அரசாங்க கட்சியின் முதற்கோலாசான் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரின் இணக்கத்தின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்ட இணைப்பில் குறிப்பிடப்பட்ட 22 அமைச்சுக்களினதும் விசேட அலுவல்களுக்கான செயலகத்தினதும் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2.               (அ)                அக்குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரினால் நியமிக்கப்படல் வேண்டும்.

          (ஆ)        95 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அக்குழுவானது அரசாங்கக்கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபத்தியொன்றுக்கு (21) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

3.               அக்குழுவானது

                         (அ)                அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்,

           (ஆ)       ஆட்கள், பத்திரங்கள் மற்றும் பதிவேடுகளை வரவழைப்பதற்கும் யாரேனும் நபரைப் பாராளுமன்றத்திற்கு அல்லது அக்குழுவின் முன் சமுகமளிக்குமாறு உத்தரவிடுவதற்கும் அதிகாரம் உடையதாய் இருத்தல் வேண்டும்.

4.                      மேற்படி தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்களின் குழுநிலை ஆய்வு ஆரம்பிக்கும் திகதியில் அல்லது அதற்கு முன்னர் அக்குழு அதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

இணைப்பு

1.       விசேட அலுவல்களுக்கான செயலகம்

          i.              நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர்

          ii.             மனிதவள அமைச்சர்

          iii.            கிராமிய அலுவல்கள் அமைச்சர்

          iv.            உணவு பாதுகாப்பு அமைச்சர்

          v.             நகர அலுவல்கள் அமைச்சர்

          vi.            சமூக நலன்புரி அமைச்சர்

          vii.           நுகர்வோர் நலன்புரி அமைச்சர்

          viii.          தேசிய வள அமைச்சர்

          ix.            விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்

          x.             சர்வதேச நிதிய கூட்டிணைப்பு அமைச்சர்

2.        பெளத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு

3.        தபால் சேவைகள் அமைச்சு

4.        தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு

5.        மீள்குடியேற்ற அமைச்சு

6.        சமூக சேவைகள் அமைச்சு

7.        அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

8.        அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு

9.        தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சு

10.      மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள் அமைச்சு

11.      அராசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு

12.      உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு

13.      தேசிய மரபுரிமைகள்  அமைச்சு

14.      பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

15.      தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு

16.      சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சு

17.      தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு

18.      தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு

19.      கலாசார, கலை அலுவல்கள் அமைச்சு

20.      வனசீவராசிகள் வளப் பேணுகை  அமைச்சு

21.      சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு

22.      தாவரவியல் பூங்காக்கள், பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சு

23       விசேட கருத்திட்டங்களுக்கான அமைச்சு

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

தம்மிக தசநாயக்க

தொலைபேசி

0094-11-2777228

தொலைநகல்

0094-11-2777228

மின்னஞ்சல்

dhammika_d@parliment.lk

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2015-07-26





தொடர்புடைய தகவல்கள்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டக் குறிப்புகள்

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  5 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-09-04

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2014-11-17





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks