E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0504/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1663/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இது வரை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆலோசகர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி ஆலோசகர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி ஆலோசகர்களுக்கு செலுத்தப்படுகின்ற சம்பளங்கள், படிகள் மற்றும் சிறப்புரிமைகள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி (iii)இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திற்காக இதுவரை செலவிட்டுள்ள மொத்தப் பணத்தொகை யாது என்பதையும்;

      (v) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொது மக்களுக்கு இந்த ஆலோசகர்களின் மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks