E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0512/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.

    1. 512/ '18

      கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட H.C/4648/2009 ஆம் இலக்க (சட்டத்துறைத் தலைமையதிபதியின் இலக்கம் சீ.ஆர். 2/26/2009) வழக்கின் பிரதிவாதிகள் யாவர் என்பதையும்;

      (ii) அந்தக் குற்றப்பகர்வுப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப் பகர்வுகள் யாவை என்பதையும்;

      (iii) அந்த குற்றப் பகர்வுகளிலிருந்து சகல பிரதிவாதிகளதும் குற்றம் மற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) அவ்வாறு விடுவிக்கப்பட்ட போதிலும் சட்டமா அதிபரால் மீண்டும் குற்றச் சாட்டுக்களை உரியவாறு மீள ஸ்தாபிக்க முடியுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அதன்படி, சட்டத்துறைத் தலைமையதிபதி குற்றாட்டுக்களை உரியவாறு மீள ஸ்தாபித்து பிரதிவாதிகளுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வாரா என்பதையும்;

      (iii) அவ்வாறெனில், மீண்டும் எக்காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதையும்;

      (iv) அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படாவிடின், அந்தத் தீர்மானத்துக்கு ஏதுவான காரணங்கள் தொடர்பாக அறிவூட்டப்படுமா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks