E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0513/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

    1. 513/ '18

      கௌரவ பிரேமலால் ஜயசேகர,— நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தின், நிவித்திகல தேர்தல் தொகுதியில், "அய்-ரோட்" கருத்திட்டதின் கீழ் 05 வீதிக் கருத்திட்டங்களுக்குரிய வேலைகள் 2015 திசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;

      (ii) இதில் 02 கருத்திட்டங்களின் வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதென்பதுடன் 03 கருத்திட்டங்களின் வேலைகள் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) நிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (ii) 2017 ஆம் ஆண்டில் வேலைகள் நிறைவு செய்யப்படவிருந்த இக்கருத்திட்டங்களின் வேலைகள் நிறைவு செய்யப்படும் காலகட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks