E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0521/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 521/ '18

      கெளரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி மாற்றூட்டல் இயந்திரங்களை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;

      (ii) 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட குருதி மாற்றூட்டல் இயந்திரங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) மீதி இயந்திரங்களை வழங்கும் திகதி யாது என்பதையும்;

      (iv) அதற்காக முறைசார்ந்ததாக கேள்விப்பத்திரம் கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், வழங்குநர்கள் மற்றும் அவர்களின் விலைமனுக்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அத்தியாவசிய மருந்துகளை நாட்டினுள் உற்பத்தி செய்துகொள்ளும் கருத்திட்டத்தை ஆரம்பிக்கவென 2017 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;

      (ii) மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் / கற்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-19

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks