E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0523/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 523/ '18

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பிரதேச செயலகங்களுக்கென வீட்டுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட கருத்திட்டத்தின் பொருட்டு அலுவலர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதையும்;

      (ii) ஆமெனின், ஆட்சேர்க்கப்பட்ட அத்தகைய அலுவலர் ஒவ்வொருவரினதும் பெயர், முகவரி, கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலகம் யாதென்பதையும்;

      (iii) இவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பது நிரந்தர அடிப்படையிலா, அமைய அடிப்படையிலா, விசேட கருத்திட்டங்களுக்கு மட்டுமா என்பதை குறிப்பிடுவாரா என்பதையும்;

      (iv) இவர்களின் மாதாந்தச் சம்பளம் / நாளாந்த கொடுப்பனவு யாது என்பதையும்;

      (v) விசேட அல்லது அமைய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பின் இவர்களின் சேவைக் காலம் எவ்வளவு என்பதையும்;

      (vi) இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vii) ஆமெனின், அது எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-10

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks