பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1504/ '17
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் 2017 ஆம் ஆண்டில் இற்றைவரையிலும் சந்தையில் நெற் செய்கைக்காகவும் வேறு பெருந்தோட்டச் செய்கைக்காகவும் பயன்படுத்துகின்ற பல்வேறு உர வகைகளின் விலைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
(ii) 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்ட உரத்தின் விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது உரத்தின் விலை அதிகரித்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சந்தையில் ரூபா 1300/- ஆக இருந்த 50 கிலோ கிறாம் உரப் பையொன்றின் விலை தற்போது ரூபா 2900/- வரை அதிகரித்துள்ளதா என்பதையும்;
(iv) உரத்தின் விலையை கட்டுப்படுத்தாதுவிடின் அல்லது சந்தை விலைக்கேற்ப உர மானியம் அதிகரிக்கப்படாவிடின், பெருந்தோட்டச் செய்கை உள்ளிட்ட கமத்தொழிலை சார்ந்து வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) ஆமெனில், அதற்காக முன்மொழியப்படும் தீர்வுகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-23
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks