E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0547/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 547/ '18

      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 ஆம் ஆண்டு இரண்டு இலட்சம் ரூபா வீதம் வீடமைப்பு கடன்களை வழங்குவதற்கு எஹலியகொடை பிரதேச செயலகத்துக்கு பெயர் பட்டியலொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா;

      (ii) அல்லது பிரதேச செயலகத்தினால் அவ்வாறான பட்டியலொன்று தயாரிக்கப்படடுள்ளதா;

      (iii) அந்த பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஆனார்கள்;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா ?

      (ஆ) (i) அவ்வாறான நபர்களின் அரசியல் ஆதரவினை அறிந்துகொள்வதற்காக பிரதேச செயலகத்துடன் சம்பந்தப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் ஆராய்ந்துப் பார்க்க முடியும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;

      (ii) அவ்வாறான ஓர் ஆய்வினை மேற்கொள்ள அவர் உடன்படுவாரா;

      (iii) இன்றேல் அரசியல் பக்கச்சார்புக்கமைய வீடமைப்புக் கடன் வழங்குவதை அனுமதிப்பாரா;

      என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-26

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks