பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0566/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 566/ '18

      கௌரவ அசோக்க பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

      (ii) அந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாகாண சபை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;

      (iii) இன்றளவில் வடமேல் மாகாணத்தில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்காக பரீட்சையொன்றை நடத்துதல் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சருக்கும் மாகாண பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதை அறிவாரா;

      (iv) அந்த கருத்து வேறுபாட்டை தீர்த்து மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்ளை நிரப்புவதற்காக குறித்த பரீட்சையை நடத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது;

      என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks