E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0596/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 596/ '18

      கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உள்ளூர் கைத்தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் பற்றிய கூட்டமொன்று 2018.03.05 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது என்பதையும்;

      (ii) இக்கூட்டத்தின்போது மேற்படி விடயம் சார்ந்த காரணிகள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இதுவரையில் மேற்படி குழு கூடியுள்ள தடவைகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்டுள்ள முக்கியமான தீர்மானங்கள் யாவை என்பதையும்;

      (ii) வெளிநாட்டவர்கள் இலங்கையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் செய்யப்பட்ட விதப்புரைகள் குறித்து தற்போது எடுக்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானங்கள் யாவை என்பதையும்;

      (iii) உள்நாட்டு கைத்தொழில், சேவைகள் மற்றும் ஏனைய வர்த்தகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எட்கா ஒப்பந்தத்தை தாமதப்படுத்துவதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு குறிப்பிட்ட கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேற்படி கூட்டத்தின் பின்னர் பெறப்பட்டுள்ள செயலாற்றுகை தொடர்பில் சுருக்கமான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-25

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks