E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0639/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.

    1. 0639/ ’10 கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண,— சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மத்தல விமான நிலையத்தை நிர்மாணிப் பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவென்பதையும், (ii) மேற்படி நிர்மாணப்பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு எத்தனை ஹெக்ரயர் என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) குறித்த நிர்மாணப்பணிகளுக்காக மேற்படி பிரதேசத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) மேற்படி குடும்பங்களில் சட்டரீதியான குடியிருப்பாளர்களினதும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும், (iii) மேற்படி குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டமேதும் உண்டா என்பதையும், (iv) ஆமெனில், அது யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) மேமற்படி விமான நிலைய நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ள வருடம் யாதென்பதையும், (ii) புதிய விமான நிலையத்தை நிர்மாணித்ததன் பின்னர் அதனை பயன்படுத்துபவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற வருடாந்த விமானப் பணிகளின் எண்ணிக்கை அண்ணளவாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்குக் குறிப்பிடுவாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-12

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks