E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0952/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 952/ '18

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குருநாகல் மாவட்டத்திலுள்ள குளங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி குளங்களின் பெயர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக யாவை என்பதையும்;

      (iii) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்கள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை யாது என்பதையும்;

      (iv) நிரல் அமைச்சின் மூலம் வடமேல் மாகாண நீர்ப்பாசன அபிவிருத்திக்காக இந்த ஆண்டிற்கு ரூபா 400 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த அபிவிருத்திப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படாத காரணத்தினால், குறித்த பணத் தொகை திறைசேரிக்கு திரும்பிச் செல்லும் ஆபத்து தோன்றியுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (v) ஆமெனின், மேற்படி பணத்தை மாவட்டத்திலுள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்த அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks