E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0961/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 961/ '18

      கெளரவ பிரசன்ன ரணதுங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஆசிரியர்களுக்கு புதிய அறிவினை ஊட்டுவதற்கு ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏதுவாக அமையுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சினால் வலய மற்றும் விடய மட்டத்தில் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) அவ்வாறு ஒழுங்குசெய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை, பாடங்கள் மற்றும் அதற்காக செலவுசெய்யப்பட்ட பணத்தொகை ஆகியன ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 2016.06.06 இலுள்ளவாறு மேல் மாகாண மினுவாங்கொடை கல்வி வலயத்தின் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடசாலைக்கமைய எவ்வளவென்பதையும்;

      (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நடத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவுசெய்யப்பட்ட பணத்தொகை ஆகியன ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும் ;

      (iii) இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை மற்றும் நடைமுறைப்படுத்திய ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை போதுமானதா என்பதையும்;

      (iv) ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்க முடியாது என்பதை அறிவாரா என்பதையும்;

      (v) தேசிய தேவையெனக் கருதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இயலுமான வகையில் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுப்பாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks