பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
965/ '18
கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொணறாகலை மாவட்டத்தின் வெல்லவாய, பரகஸ்மங்கட, ரதாபொல படுகைப் பாலம் ஊவா மாகாண சபையினால் நிருமாணிக்கப்பட்டதா என்பதையும்;
(ii) மேற்படி படுகைப் பாலத்திற்கு செலவிடப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;
(iii) மேற்படி படுகைப் பாலம் உரிய இடத்துக்குப் புறம்பாக பிரிதொரு இடத்தில் அமைக்கப்பட்டதன் விளைவாக அதனை அமைத்து ஆறு மாத காலம் கூட கடப்பதற்கு முன்னனர் உடைந்து நாசமடைந்தமையினால் ரூ. 1,874,952.44 நட்டம் ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஊவா மாகாணத்தின் பிரதி பிரதம செயலாளரின் (பொறியியல் சேவைகள்) ஆலோசனைகளை பின்பற்றாமையின் மூலமும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் செயலாற்றாமையின் மூலமும் கடமையினைத் தவறவிட்டு மேற்படி நட்டத்தை ஏற்படுத்தியமை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் விதப்புரையின் பிரகாரம் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) இவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல். ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-07
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks