E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0970/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 970/ '18

      கௌரவ இஷாக் ரஹுமான்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இப்பலோகம பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கலாவெவ வைத்தியசாலை தற்போது கடும் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்பதையும்;

      (ii) தற்போது செயற்படும் கலாவெவ குடிநீர் கருத்திட்டம் கலாவெவ வைத்தியசாலைக்கு 500 மீற்றர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) இந்த 500 மீற்றரை நீடிப்பதன் மூலம் கலாவெவ வைத்தியசாலைக்கும் அதற்கு அப்பாலுள்ள பலலுவெவ, திக்அந்தியாய, கரவிலகல மற்றும் நேகம ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு குடி நீர் வழங்க முடியும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், இந்நீர்க் கருத்திட்டத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திகதி யாது என்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks