E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1115/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 1115/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் தேயிலையின் அளவு மெட்ரிக் தொன்களில் எவ்வளவு;

      (ii) இலங்கை தேயிலையைக் கொள்வனவு செய்யும் நாடுகள் யாவை;

      (iii) இறக்குமதி செய்யப்படும் தேயிலையானது இலங்கை தேயிலைச் சபையினால் முறையான பரிசீலனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றதா;

      (iv) இன்றேல், இறக்குமதி செய்யப்படும் தேயிலையின் தரம் பற்றிய பொறுப்பினை ஏற்பவர்கள் யார்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தேயிலைக் கொழுந்துகளை உலரவிடுகையில் அல்லது தேயிலையாக மாற்றும் தொழிற்பாட்டின் போது கைத்தொழிற்சாலையினுள் சீனி அல்லது வேறு சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் கடந்த காலப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனவா;

      (ii) இது குறித்து பரிசீலனைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா;

      (iii) தேயிலையில் சீனியின் அடர்த்தியை அளவீடு செய்வதற்கானதொரு அலகு முறை உள்ளதா;

      (iv) தேயிலையின் தரத்தினைப் பாதிக்கும் வகையில் தொழிற்படுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ ஏ.டி. பிரேமதாச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks