E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1116/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 1116/ '18

      கெளரவ தயாசிறி ஜயசேகர.— உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மத்திய கலாசார நிதியத்தினால் நிருவகிக்கப்படும் தொல்பொருளியல் நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி நிலையங்களின் பெயர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப குறிப்பிடுவாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி நிலையங்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட,

      (i) நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை;

      (ii) அமைய ஊழியர்களின் எண்ணிக்கை;

      (iii) ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் எண்ணிக்கை;

      (iv) அமைய ஊழியர்களில் நிரந்தர சேவையில் இணைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை;

      (v) ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களில் நிரந்தர சேவையில் இணைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை;

      ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி ஆட்சேர்ப்புகள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

      (ii) தற்போது காணப்படும் ஊழியர்களின் வெற்றிடங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks