பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1126/ '18
கெளரவ விமல் வீரவன்ச,— உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய ஆவணக் காப்பகத்தின் சகல பிரதான பிரிவுகளையும் கண்காணிப்புச் செய்வதானது, அதன் பணிப்பாளர் நாயகம், பதவிநிலை அலுவர்கள் மற்றும் அது தொடர்பில் பொறுப்புவாய்ந்த பட்டதாரி அலுவலர் ஒருவரை உள்ளடக்கியதான, முறையான பொறிமுறை ஊடாக மேற்கொள்வது, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த முறையியலாக இருந்த போதிலும், அம்முறையை மாற்றி ஆவணக் காப்பகத்திலுள்ள இரகசிய ஆவணங்களைக் கண்காணிப்புச் செய்யும் பொறுப்பை, அதன் தற்போதைய பணிப்பாளர் நாயகம், தமக்கு மாத்திரம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணம் யாது என்பதையும்;
(iii) அரசாங்க சேவை தொடர்பிலான இரகசிய ஆவணங்களைப் பாதுகாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்வது பற்றிய எந்தவொரு முன் அனுபவமும் அல்லது தொழில்சார் தகைமையும் இல்லாத மேற்படி பணிப்பாளர் நாயகம் குறித்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது எவ்வாறான தகைமைகளின் அடிப்படையில் என்பதையும்;
(iv) நிறுவன நடைமுறை, குறிப்பாக இரகசிய ஆவணங்கள் பற்றிய பொறுப்பு அவ்வாறு தனியொரு நபரினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படுவது பற்றிய அபாயகரமான தீர்மானம், ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனச் முறையியல்களுக்கு முரணானது அல்லவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-07
கேட்டவர்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks