E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1128/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 1128/ '18

      கௌரவ எஸ். சிறீதரன்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை புகையிரதத் திணைக்களம்,

      (i) பெற்ற மொத்த வருமானம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (ii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வருமானம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      (ii) வட மாகாணத்தின் வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரை அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரை அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) வட மாகாணத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள புகையிர நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் பணியாற்றுகின்றவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) முதலாம் வகுப்பு உறங்கல் கூடங்களைக் கொண்டதாக சேவையில் ஈடுபடுகின்ற புகையிரதங்களின் பயண முடிவிடங்கள் யாவையென்பதையும்;

      (ii) யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுகின்ற புகையிரதங்களில் முதலாம் வகுப்பு உறங்கல் கூடங்கள் இல்லாதிருப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks